DineshRajaMaheswari

Friday, May 27, 2005

ஐசி 555 சிங்கபூர் டு மதுரை - 30 மணி நேரம்

Image hosted by Photobucket.com

ஆம் 30 தே மணி நேரத்தில் நீங்கள் சிங்கபூரில் இருந்து சென்னை வழியாக மதுரையை அடையலாம். நம்பினால் நம்புங்கள். போனமாதம்
நான் இப்படி தான் போனேன். விமான நிலையத்தில் சோதனை எல்லாம் முடிந்து விமான இருக்கை சீட்டு வாங்கி விமனத்தில் ஏறுவதற்காக காத்திருந்தேன்.இப்போது மணி காலை 8.20. சரியான
புரப்பாடு நேரம் காலை 8.25.

Image hosted by Photobucket.com

விமானத்தில் உள்ளே செல்ல எந்த ஒரு
அழைப்பும் வரவில்லை.பயனிகளின் கேள்விகள் ஆரம்பமாயின ஏன்? என்ன?..........
விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிப்பு வந்தது .
பயனிகளின் பிதற்றல் ஆரம்பமாகிறது.

Image hosted by Photobucket.com

எனக்கோ என்னசெய்வது
என்று தெரியவில்லை ஏனா? நான் மதுரை விமானத்தை சென்னையில்
மதியம் 12.30 க்கு பிடிக்கனும். இப்படி நடப்பது என் முதல் அனுபவம்.
பிறகு காலை உணவு ரொட்டி,வெண்னை,பழசாறு கொடுத்து அமைதிபடுத்தினார்கள். தொழில்நுட்ப கோளாறு என்றும் சிங்கபூரில் இருந்து மதியம் 1.00 மணி க்கு தான் புறப்படு என்றும் அறிவிப்பு வந்தது

என்னுடன் மூன்று பேர் மதுரை செல்பவர்கள். நாங்கள் எங்களுடைய
கோபங்களை பகிர்ந்து கொண்டோம். பிறகு நாங்கள் கண்ணாடி வழியாக
பார்த்த பின்பு தெரிந்தது சக்கரங்களை கழற்றி மாட்டிக்கொண்டு இருந்தார்கள்.

ஆகா ஆரம்பிச்சுட்டாங்கடா.. ஆரம்பிச்சுட்டாங்கடா..

மதிய சாப்பாடும் வந்துவிட்டது. நான் கேமிராவை எடுத்து சக்கரங்கள்
இல்லாத விமானத்தை படம் பிடித்தேன்.என்ன என்று விசாரித்து பார்தால் சக்கரம் பஞ்ஜர் ஆ போச்சாம்.

Image hosted by Photobucket.com


பிறகு ஒரு வழியாக மதியம் 2 மணிக்கு சிங்கையை விட்டு பயணத்தை
ஆரம்பித்து சென்னையை இந்திய நேரப்படி மாலை 4 மணி க்கு தரையை தொட்டது

Image hosted by Photobucket.com

மதுரை செல்பவர்கள் மதுரை விமானத்தை விட்டுவிட்டோம்.
உள்நாட்டு விமான நிலைய அதிகாரியை சந்தித்து மாற்று ஏற்பாடு
கேட்டோம், அவர்கள் எங்ளை நட்சத்திர விடுதியில் தங்கி மறுநாள்
மதுரை விமானத்தில் செல்லுமாறு எளிமையாக சொல்லிவிட்டார்கள்.

Image hosted by Photobucket.com

பிறகு என்ன எஃமோரில் அம்பாசிடர் பல்லவா நட்சத்திர விடுதியில் தங்கி மறுநாள்
மதுரை விமானத்தில் சென்று மதியம் 2.00 மணிக்கு மதுரையை
அடைந்தேன்..

Image hosted by Photobucket.com


எஃமோரில் அம்பாசிடர் பல்லவா நட்சத்திர விடுதியில் அனுபவித்ததை
தனி சுட்டியில் பார்போம்.



ஐசி 555 - நீ உண்மையிலே உழைப்பாளி.......!

வேற என்னத்த சொல்லுறது போங்க.

Image hosted by Photobucket.com

Tuesday, May 24, 2005

ஜல்லிகட்டு jalikattu....

இந்த ஜல்லிகட்டுக்கு நானும் என்னுடைய நண்பன் சானாவும் மற்றும்
பரி பட்டாளங்களுடனும் போனோம். வாமா மின்னல் .......றது மாதிரி
வந்தது ஒரு காளை......... பிறகு தமிழ்மணம்.காம் வெள்ளிதிரையில் கான்க.

2001/01/16 அன்று திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடந்த
எங்களுடைய வீர விளையாட்டு.

வெள்ளை சட்டையில் இருப்பது நானே.... தலை கட்டை கவனிக்க வேண்டாம்.



Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Monday, May 23, 2005

இரண்டு பிரச்னை

இந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதான்னு இரண்டு பிரச்னை.
முளைக்களைன்னா பிரச்னையில்லை.
முளைச்சா இரண்டு பிரச்னை.
அதை மாடு திங்குமா திங்காதான்னு இரண்டு பிரச்னை.
திங்கலினா பிரச்னையில்லை.
தின்னா இரண்டு பிரச்னை.

அது பால் கரக்குமா கரக்காதான்னு
பால் கரக்கலைனா பிரச்னையில்லை.
கரந்தா இரண்டு பிரச்னை.
அதை மனுஷன் குடிப்பானா குடிக்கமாட்டானான்னு.

குடிக்கலைனா பிரச்னையில்லை.
குடிச்சா இரண்டு பிரச்னை.
அவன் உயிரோடு இருப்பானா இருக்க மாட்டானான்னு

உயிரோடு இருந்தானா பிரச்னையில்லை.
அவன் செத்தானா இரண்டு பிரச்னை.
அவனைப் புதைக்கிறதா எரிக்கிறதா?

எரிச்சா பிரச்னையில்லை.
புதைச்சா இரண்டு பிரச்னை
அந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதானு...!

Saturday, May 21, 2005

அரிக்கேன் விளக்கு திருவிழா - சிங்கப்பூர்


Lantern Festival At Chinese Garden - Singapore Posted by Hello

அரிக்கேன் விளக்கு திருவிழா - சிங்கப்பூர்

தேக்கடி ஏரி


Thekkadi Lake Posted by Hello

தேக்கடி ஏரி

மர உச்சி வீடு - தேக்கடி


Tree Top House at Thekkadi ( Kerala )
Posted by Hello
மர உச்சி வீடு - தேக்கடி

தேக்கடியிலிருந்து நடந்து செல்லும் தூரம்

தங்கும் வாடகை - ரூபாய் 2000 ( 24 மணி நேரம் )

இது என்னுடைய முதல் பதிவு




படம் நன்றாக இருந்தால் பின்னூட்டங்கள் இடவும்

அப்பாடி! தமிழில் முழுவதுமாக அடித்தாகி விட்டது.