ஐசி 555 சிங்கபூர் டு மதுரை - 30 மணி நேரம்
ஆம் 30 தே மணி நேரத்தில் நீங்கள் சிங்கபூரில் இருந்து சென்னை வழியாக மதுரையை அடையலாம். நம்பினால் நம்புங்கள். போனமாதம்
நான் இப்படி தான் போனேன். விமான நிலையத்தில் சோதனை எல்லாம் முடிந்து விமான இருக்கை சீட்டு வாங்கி விமனத்தில் ஏறுவதற்காக காத்திருந்தேன்.இப்போது மணி காலை 8.20. சரியான
புரப்பாடு நேரம் காலை 8.25.
விமானத்தில் உள்ளே செல்ல எந்த ஒரு
அழைப்பும் வரவில்லை.பயனிகளின் கேள்விகள் ஆரம்பமாயின ஏன்? என்ன?..........
விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிப்பு வந்தது .
பயனிகளின் பிதற்றல் ஆரம்பமாகிறது.
எனக்கோ என்னசெய்வது
என்று தெரியவில்லை ஏனா? நான் மதுரை விமானத்தை சென்னையில்
மதியம் 12.30 க்கு பிடிக்கனும். இப்படி நடப்பது என் முதல் அனுபவம்.
பிறகு காலை உணவு ரொட்டி,வெண்னை,பழசாறு கொடுத்து அமைதிபடுத்தினார்கள். தொழில்நுட்ப கோளாறு என்றும் சிங்கபூரில் இருந்து மதியம் 1.00 மணி க்கு தான் புறப்படு என்றும் அறிவிப்பு வந்தது
என்னுடன் மூன்று பேர் மதுரை செல்பவர்கள். நாங்கள் எங்களுடைய
கோபங்களை பகிர்ந்து கொண்டோம். பிறகு நாங்கள் கண்ணாடி வழியாக
பார்த்த பின்பு தெரிந்தது சக்கரங்களை கழற்றி மாட்டிக்கொண்டு இருந்தார்கள்.
ஆகா ஆரம்பிச்சுட்டாங்கடா.. ஆரம்பிச்சுட்டாங்கடா..
மதிய சாப்பாடும் வந்துவிட்டது. நான் கேமிராவை எடுத்து சக்கரங்கள்
இல்லாத விமானத்தை படம் பிடித்தேன்.என்ன என்று விசாரித்து பார்தால் சக்கரம் பஞ்ஜர் ஆ போச்சாம்.
பிறகு ஒரு வழியாக மதியம் 2 மணிக்கு சிங்கையை விட்டு பயணத்தை
ஆரம்பித்து சென்னையை இந்திய நேரப்படி மாலை 4 மணி க்கு தரையை தொட்டது
மதுரை செல்பவர்கள் மதுரை விமானத்தை விட்டுவிட்டோம்.
உள்நாட்டு விமான நிலைய அதிகாரியை சந்தித்து மாற்று ஏற்பாடு
கேட்டோம், அவர்கள் எங்ளை நட்சத்திர விடுதியில் தங்கி மறுநாள்
மதுரை விமானத்தில் செல்லுமாறு எளிமையாக சொல்லிவிட்டார்கள்.
பிறகு என்ன எஃமோரில் அம்பாசிடர் பல்லவா நட்சத்திர விடுதியில் தங்கி மறுநாள்
மதுரை விமானத்தில் சென்று மதியம் 2.00 மணிக்கு மதுரையை
அடைந்தேன்..
எஃமோரில் அம்பாசிடர் பல்லவா நட்சத்திர விடுதியில் அனுபவித்ததை
தனி சுட்டியில் பார்போம்.
ஐசி 555 - நீ உண்மையிலே உழைப்பாளி.......!
வேற என்னத்த சொல்லுறது போங்க.
4 Comments:
Nice narration dinesh.....
Keep it up and Go ahead....
தினேஷ்,
படங்கள் மிக அருமை.
தினேஷ்,
இன்றுதான் உங்கள் பதிவைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவஸ்தையான அனுபவத்தை - படங்களுடன் அட்டகாசமாக பதிந்துள்ளீர்கள். நன்றி. இன்னிக்குத்தன் மலேசியா ஏர்லைன்ஸா, ஐசி-யான்னு கொஞ்சம் குழப்பத்துல இருந்தேன் - தெளிவுபடுத்தீட்டீங்க...:)
தமிழ் மணத்தில் கொஞ்சம் பின்னோக்கி போனால் இதே போல் பல "இந்தியன்" கதைகளை படிக்கலாம்.
Post a Comment
<< Home