DineshRajaMaheswari

Monday, May 23, 2005

இரண்டு பிரச்னை

இந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதான்னு இரண்டு பிரச்னை.
முளைக்களைன்னா பிரச்னையில்லை.
முளைச்சா இரண்டு பிரச்னை.
அதை மாடு திங்குமா திங்காதான்னு இரண்டு பிரச்னை.
திங்கலினா பிரச்னையில்லை.
தின்னா இரண்டு பிரச்னை.

அது பால் கரக்குமா கரக்காதான்னு
பால் கரக்கலைனா பிரச்னையில்லை.
கரந்தா இரண்டு பிரச்னை.
அதை மனுஷன் குடிப்பானா குடிக்கமாட்டானான்னு.

குடிக்கலைனா பிரச்னையில்லை.
குடிச்சா இரண்டு பிரச்னை.
அவன் உயிரோடு இருப்பானா இருக்க மாட்டானான்னு

உயிரோடு இருந்தானா பிரச்னையில்லை.
அவன் செத்தானா இரண்டு பிரச்னை.
அவனைப் புதைக்கிறதா எரிக்கிறதா?

எரிச்சா பிரச்னையில்லை.
புதைச்சா இரண்டு பிரச்னை
அந்த இடத்தில புல்லு முளைக்குமா முளைக்காதானு...!

3 Comments:

Anonymous Anonymous said...

அண்ணாத்த,
மாடு பால் கரக்காது ... பிரச்சினை இல்லைத் தானே! :)

மாடு பால் சுரக்கும், மனுஷன் தான் மாட்டுல பால் கறப்பான்.

Friday, May 27, 2005 12:29:00 PM  
Anonymous Anonymous said...

porapputtudangappa !!!!!!porapputtudangappa?????????

soopbur

Wednesday, November 16, 2005 2:10:00 AM  
Anonymous Anonymous said...

nanthan ayya

Wednesday, November 16, 2005 2:10:00 AM  

Post a Comment

<< Home